கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு புண் போன்றவை ஏற்படும்.
பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள்:
மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தது வந்தால் , உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
வேப்பிலை கொழுந்துடன் துளசி சேர்த்து ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.
தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான சூடு நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.
துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.