| ||||||
hi this is the free serive to get sms on Health tips on ur mobile if u want subscribe please send msg ON manikandanpharamcsit to 9870807070
Wednesday, March 23, 2011
Friday, March 11, 2011
TUBERCULOSIS
காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள் 1.சளிப்பரிசோதனை 1.வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை அவதானித்தல். 2. தோற் சோதனை (மாண்டு பரிசோதனை) காசநோய்க்கான சிகிச்சை சிகிச்சை அளிப்பதன் நோக்கங்கள் காசநோயாளியை பூரணமாகக் குணமாக்குதல். காசநோயாளியை இறப்பிலிருந்தும், பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாத்தல். சமூகத்திற்கு நோய் பரவலைத்தடுத்தல் |
காசநோயுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணல் |
BCG தடுப்பு மருந்து ஏற்றல் |
உட்கொள்ளும் காசநோய் மருந்துகளின் பக்கவிளைவுகள் |
காச நோய்
காச நோய்
மைக்கோ பாக்டீரியம் டியூபர்கிலோசிஸ் (Mycobacterium tuberculosis) எனும் கிருமியால் காச நோய் ஏற்படுகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமியின் வடிவத்தை வைத்து டியூபர்கிள் பாசில்லஸ் (tubercle bacillus) என்றும் அறிவியல் அழைக்கும் இந்த கிருமி, தாக்கும் போது உடலின் பல உறுப்புகள் பாதிப்பிற்குள்ளாகலாம் என்றும், ஆனால் இது நுரையீரலையே அதிகம் பாதிக்கிறது என்றும் மருத்துவம் கூறுகிறது.
நுரையீரலில் சென்று தங்கும் காச நோய் கிருமி, வேகமான பெருகுவதால் காய்ச்சலும், நெஞ்சு வலியும், இரத்தம் வெளிவரும் இருமலும், தொடர்ந்து இருமல் இருப்பதும் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவ்வளவு சாதாரணமாக வலிமை பெறுவதில்லை என்று மருத்துவம் கூறுகிறது. ஒருவருடைய உடலின் எதிர்ப்பு சக்தியை (immune power) பொறுத்தே இந்நோய் வலிமை பெறுகிறது. காச நோய் கிருமி உடலிற்குள் வந்ததமும் பல்கிப் பெருகுவதில்லை. அது பல ஆண்டுகள் மறைவாகவே (latent), அதாவது எந்த அறிகுறியும் காட்டாமல் இருக்கும். உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் அது தனது தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. அப்போதுதான் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும்.
நுரையீரல் மட்டுமின்றி, காச நோய் முற்றும்போது அது எலும்பு, சிறுநீரங்கங்கள், முதுகுத் தண்டையும், முளையையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தையும் தாக்கவல்லது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. சாதாரணமாக ஒருவர் காச நோய்க் கிருமியால் தாக்கப்பட்டிருந்தாலும், அது முற்றாத நிலையில் அது மற்றவரை பாதிப்பதில்லை. ஆனால் மேற்கண்ட அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் அது தொற்று நோயாகிறது. இதனை ஆக்டிவ் டிபி என்றழைக்கிறது மருத்துவம். இது உடலில் உள்ளிருந்தே உடற்பாகங்களை அழிக்க வல்லதாகையால் இதனை உடல் திண்ணும் நோய் என்றும் அயல் நாடுகளில் அழைக்கின்றனர்.
மேற்கண்ட அறிகுறிகள் காச நோய் முற்றிய நிலையில் காணப்படுவதாகும். காச நோய் முற்றிக்கொண்டிருக்கிற நிலையில், அதன் பாதிப்புள்ளவருக்கு காரணமற்ற உடல் எடை குறைவு, களைப்பு, சோர்வு, இலேசான மூச்சுத் திணறல், காய்ச்சல், இரவில் வியர்த்தல் அல்லது குளிர் காய்ச்சல், பசி இல்லாமை ஆகியனவாகும். மிகவும் குறிப்பான அறிகுறி, இடைவெளியின்றி இருமல் 2, 3 வாரங்களுக்குத் தொடர்தல், இருமலில் இரத்தம் வெளியேறுதல் ஆகியனவாகும்.
இந்த அறிகுறி தெரிந்த உடனேயே மருத்துவரை நாடினால் அவர்கள் அதனை பிபிடி (Purified protein derivative test) எனும் ஊசி போட்டு அடுத்த 72 மணி நேரத்தில் காச நோய் உள்ளதை உறுதி செய்வார்கள். அதன் பிறகு அதற்குரிய மருந்துகளை அளிப்பார்கள்.
காச நோய் வராமல் தடுக்க பிசிஜி எனும் தடுப்பு ஊசி போடப்படுவதுண்டு. இது உலக அளவில் பொதுவான தடுப்பு முறையாகும். இதனால் குழந்தைகளும், சிறுவர்களும் காச நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். ஆயினும் வயதான பிறகு காச நோய் தாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய காரணமாக உள்ளது உடலின் எதிர்ப்பு சக்தியே.
காச நோய் வராமல் தடுக்க...
1. உடலில் எதிர்ப்பு சக்தியை குறையாமல் வைக்கக்கூடிய சிறந்த உணவுகளைச் சாப்பிடுவது.
2. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் விடுபடுதல்.
3. உடற்பயிற்சியின் மூலம் உடலை எப்போதும் துடிப்போடு வைத்துக்கொள்ளல்.
4. காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தி வைத்தால், அவர்களோடு புழங்க வேண்டிய நேரத்தில் வாய், மூக்கு ஆகியவற்றை தூய துணியால் மூடிக்கொண்டு பணி செய்தல்.

முதன்மை அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவரை கண்டு, உரிய பரிசோதனைகள் மூலம் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்துகொள்ளல் அல்லது உரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
காச நோயை தவிர்ப்போம் |
மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனைத்துலக காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. காச நோய் ஆண்டுதோறும் உலகில் 1.7 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது, காச நோயின் அறிகுறிகள உடற் சோர்வு சிகிச்சை ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். காசநோய் தவிர்ப்ப மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும். போஷாக்குக் குறைபாடு எளிதாக இந்நோய் தொற்ற வழிவகுக்கும் பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும். காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும். இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும். காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம். பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். |
Subscribe to:
Posts (Atom)