நம் இதயத்தை சரியாக கவனிக்காவிட்டால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தினசரி நம் செயல்களில் சிலவற்றை கடைப்பிடித்தாலே பிரச்னைகளில் இருந்து மீளலாம்.
சத்தம் குறைக்க வேண்டும்: கார், பேருந்தின் ஹாரன் ஒலி, சைரன், அங்குமிங்கும் இரைந்து கொண்டே செல்லும் லாரிகள், டிரக்குகள், தொழிற்சாலையிலிருந்து வரும் கடுமையான சத்தங்கள், வெடி வெடிக்கும் சத்தங்கள் போன்றவை ரத்தக்கொதிப்பு, மாரடைப்பை அதிகரிக்கும் என ஒரு டென்மார்க் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இந்த ஆராய்ச்சியில் 51,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். பெரும் சத்தம் உடலில் சுரக்கும் சில வேதிப்பொருள்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் Steroid அளவை அதிகரிப்பதால் மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு அதிகரிக்கிறது.
நல்ல தூக்கம் வேண்டும்: ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது இரவில் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் 48 சதவீதம் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது.
கொஞ்சமாக தூங்குபவர்கள் அதிக பசியினால் அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், கொழுப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு மற்றவரை காட்டிலும் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சாத்தியக்கூறு அதிகம்.
டயட் சோடா தவிர்க்க வேண்டும்: சமீபத்தில் கலிபோர்னியாவில் செய்த ஆராய்ச்சியில் ஒன்று டயட் சோடா குடிப்பவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் 48 சதவீதம் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு கறுப்பு திராட்சை, கறுப்பு நிற கத்தரிக்காய், முட்டைக்கோஸ், நாவல் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு ரத்தக்கொதிப்பு வரும் வாய்ப்பு குறைவு.
1,34,000 பெண்கள், 47 ஆண்கள் உணவு பழக்கங்களை 14 வருடம் சோதித்து ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, ஆக்ஸிகரணத்தை குறைக்கக் கூடிய பொருளான(antioxidant) ஆத்ராசீனியஸ் என்ற பொருள் இதயநோய், ரத்தக்கொதிப்பு வருவதை தடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு சாக்லேட்: இதிலுள்ள கோகோ ரத்தக்கொதிப்பை குறைக்கும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் காக்கும். ரத்தம் உறைவதை குறைத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும்.
குறிப்பாக குறைந்த அளவில் அதாவது ஒரு நாளுக்கு 6.7 கிராம் அளவில் கறுப்பு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ரத்தக்குழாயை பாதிக்கும். CRP என்ற புரதப் பொருள் ரத்தத்தில் குறையும்.
இந்த CRP மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் நோயை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. சாக்லேட்டில் உள்ள பிளாசனாய்டு என்ற பொருள். ரத்தக் குழாயின் உள்ளே உள்ள செல்களை பாதுகாக்கும் மற்றும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கக்கூடிய ACE என்ற வேதிப்பொருளின் செயல்பாட்டை குறைத்து ரத்தக்கொதிப்பை குறைக்கும்.
--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ
http://manikandanpharmacist.blogspot.com/