குழந்தைகளுக்கு தடுப்பூசி போடறது பற்றி உங்களுக்கு தெரியுமா.....
15:36:33
Wednesday
2012-08-22
நமது செல்லக் குழந்தைகளை பெற்றெடுப்பது மட்டும் கடமை அல்ல. அதன் பின்பு குழந்தைகளை பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக எந்த காலத்தில் எந்த மாதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் தோழிகளே..
குழந்தை பிறந்தவுடன்: காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
ஒன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.
மூன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நான்கரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஐந்தரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒன்பதாவது மாதத்தில்: தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து
ஒன்றே கால் வயதில்: தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி
ஒன்றரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி)
நாலரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.
இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் முறையாக வழங்கவேண்டும். மறந்துடாதீங்க பெற்றோர்களே...
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1505&cat=500