Friday, December 7, 2012

குழந்தை வளர்ப்பு

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை
குழந்தை பிறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். இந்த சீம்பால் எவ்வளவு முக்கியமேன்றரிய நாம் நம் கிராமத்துப்பக்கம் சென்றால் அறியலாம். இன்றும் நம் கிராமத்துப்பக்கம் பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் சீம்பால் சாது நிறைந்தது என்று பலரும் தேடிச்சென்று வாங்கிச் செல்வதைக் காணலாம். பசுவின் சீம்பால் அதன் கன்றுக்காக கடவுள் அளிப்பது. அது சத்து நிறைந்தது எனின் கடவுள் நம் குழந்தைக்காக நமக்களிக்கும் சீம்பாலும் சத்து நிறைந்ததே. ஆகவே சத்து நிறைந்த நம் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பாலை நாம் கண்டிப்பாக நம் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து வரும் 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப் பால் போதவில்லை என்று கருதும் சமயத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கேரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நன்கு வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி காலை 11 மணியளவில் கொடுக்கலாம். கண்டிப்பாக மாலையில் தர வேண்டாம்.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

முதல் முறை:- உடைத்த கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெள்ளம் கலந்து கொடுக்கலாம்.

2வது முறை:- கோதுமை, ராகி, மக்காச்சோளம், உடைத்தகடலை,முந்திரி, கேழ்வரகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றில் உடைதக்கடலை தவிர்த்து மீதியை வறுத்து எல்லாவற்றையும் அரைத்து மாவு தயாரித்து அதில் நீர் கலந்து கொதிக்க வைத்து கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாம். இதிலும் மேற்சொன்னவாரே குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

மேற்ச சொன்ன இரண்டு முறைகளிலும் பால் கலந்தும் கொடுக்கலாம்.

* குறிப்பு:- கஞ்சியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது வெயில் காலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கஞ்சி குளிர்ச்சியைத் தரும். இதனால் குளிர்காலத்தில் அறிமுகப்படுத்தும்போது சளி பிடிக்கலாம்.

12வது மாதம் முதல் எல்லாவித உணவையும், காய்கறிகளையும் கொஞ்சம் நன்கு வேகவைத்து அறிமுகப்படுத்தவும்.

குழந்தைக்கு உணவளிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

புதிதாக அறிமுகப்படுத்தும்போது ஒன்றுக்கும் மட்ரொன்றிர்க்கும் இடைவெளி தேவை. அப்போது தான் எந்த உணவு குழந்தைக்கு ஒத்துகொள்ளவில்லை என்று நாம் அறிய முடியும். அந்த உணவை தவிர்த்து மட்ட்ரவற்றை கொடுக்க இயலும்.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலோ நாம் அறிமுகப்படுத்திய புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என அறியலாம். மேலும் தரையில் இருந்து ஏதாவது பொருளை வாய்க்குள் போட்டுக்கொண்டாலும் வயிறு உபாதை ஏற்படலாம்.

குழந்தை குறைந்தது 5 முதல் 7 தடவைகள் மலம் கழிக்கணுலாம். அதற்க்கு மேல் மலம் கழித்தால் அருகில் உள்ள மருத்துவரை அகவும்.

மேலும் உடனே நாம் தினமும் அளித்துவரும் உணவை நிறுத்திவிட்டு பார்லி கஞ்சி (அ) நொய் கஞ்சி கொடுக்கவும்.

நொய் கஞ்சி:- சிறிது பச்சரிசி நொய்யை ஒரு அகலப் பாத்திரத்தில் அதிக தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இந்த அதிகத் தண்ணீரை தண்ணீருக்கு பதில் குழந்தைக்கு கொடுத்து வரவும. கஞ்சியை உணவுக்கு பதில் கொடுக்கவும். வயிட்ட்ருபோக்கு ஓரிரு நாட்களில் உடனே சரியாகி விடும்.

இதுவரை நாம் கூறி வந்தவை குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

இனி மன ஆரோக்கியம் (குழந்தையின், அறிவுத்திறன் வளர பெற்றோர் செய்யவேண்டியவைகளைப் பார்ப்போம்.

முக்கியமானதும் நம்மில் பலர் செய்ய தயங்குகிற விஷயம் குழந்தையுடன் உரையாடுவது. நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை பொம்மை அல்ல. அதற்கும் எல்லாம் தெரியும். நாம் பேசும் அனைத்து விஷயங்களையும் குழந்தை கிரகித்துக் கொள்கிறது. ஆகவே குழந்தை பிறந்தது முதல் பெரியவரிடம் உரையாடுவது போல் உரையாடுங்கள்.

எடுத்துக்காட்டாக குழந்தை பால் குடிக்கும் முன் என்னடா செல்லம் பசிக்கிறதா? பால் குடிப்போமா? இப்ப அம்மா பால் தருவேனாம். சமத்தா பால் குடிச்சிட்டு விளையாடுவீங்கலாம். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்திருகிறார்கள். எல்லோரையும் பார்த்து சிரிப்பீர்கலாம். நீங்க சிரிச்சா எல்லோருக்கும் சந்தோஷமாம். என்னடா செல்லம் எல்லாரையும் சந்தொஷப்படுதுவீர்களா? சரி இப்ப பால் குடிப்போமா என்று குழந்தையிடம் உரையாடிக்கொண்டே பால் கொடுக்கலாம்.

இது போல் எபோழுதும் எது செய்தாலும் குழந்தையிடம் நாம் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறம் அதிகரிப்பதோடு குழந்தைக்கு பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டி குழந்தை சீக்கிரம்பேச ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு பேசிகொண்டே இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே ஒரு அன்யோன்யம் பிறக்கும். இதனால் எதிர்காலத்திலும் எல்லாவற்றையும் உங்களிடம் உங்கள் குழந்தை பகிர்ந்து கொள்ளும். இது போதுமே உங்கள் குழந்தையை உங்கள் விருப்பம் போல் நல்லவர்களாக வளர்க்க.

6 மதங்கல்லுக்குப் பிறகு நீங்கள் பேசுவதோடு உலக அறிவையும் புகட்டுங்கள். இவை எவ்வாறு என்று ஒரு சின்ன எடுத்துக்காட்டின் மூலம் கீழே கூறியுள்ளேன். இவை குழந்தையின் ஆர்வத்தை தூண்டி நுட்ப்ப அறிவை -ஐ அதிகரித்து சீக்கிரம் பேச உதவுவதுடன், குழந்தை நல்ல அறிவாளியாக, கூர்மையான புத்திசாலியாக, ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக மாறுவதை நீங்கள் கண் கூடாக காணலாம்.

குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை

குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.

பிறப்பு முதல் ஒரு வயது வரை:

பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.

குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்' பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்' மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் `பேசினில்' கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான) நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும். முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்' தேய்த்து கழுவவேண் டும். அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.

குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.

சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில் இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில் ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.

பால் குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந் தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.

ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்' கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.

2 முதல் 3 வயது வரை:

இரண்டு வயதான பிறகும் குழந்தை ஒரு சில வார்த்தைகள்தானே பேசுகிறது -என்று 75 சதவீத பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் பேச்சுத்திறன் அதிகரிக்கவே செய்யும். அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்'டிடம் ஆலோசனை பெறவேண்டும்.

குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.

இரண்டு வயது குழந்தைகள் 9-10 மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.

குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் போதிய இடைவெளியில் அமர்ந்து பார்க்கா விட்டால், கண்களைப் பாதிக்கும். குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது மிக அவசியம். அந்த ஆர்வத்தைக் கெடுத்து டி.வி. முன்னாலே உட்கார வைத்து விடுவது சரியல்ல.

இந்த பருவத்து குழந்தைகள் சிலவற்றி டம் மண் தின்னும் பழக்கம் ஏற்பட்டு விடும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மண்ணைத் தின்னும். அந்த சத்தை ஈடுசெய்ய வேண்டும். டாக்டரிட மும் காட்டி ஆலோசனை பெறலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். வற்புறுத்தி திணிப்பது சரியல்ல.

குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது அவை பளபளப்பாகவும், விலை உயர்ந்த தாகவும் இருந்து எந்த பலனும் இல்லை. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும். சப்பாத்தி மாவை சிறிதளவு பிசைந்து கொடுத்து பலவிதமான உருவங்கள் செய் யச் சொல்லலாம். பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.

4 முதல் 10 வயது வரை:

இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ, அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.

இப்போது 5, 6 வயது சிறுவர் -சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.

பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.

இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.

சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்' என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

http://books.google.co.in/books?id=DPOC1D0ImZsC&lpg=PT51&pg=PT51#v=onepage&q&f=false

Wednesday, November 21, 2012

பரோட்டா


பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!! தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.  இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .  மைதா எப்படி தயாரிகிறார்கள் ?  நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .   Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .   இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .   இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .  மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .   இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.  Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .   மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.   இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.  நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் . நன்றி -https://www.facebook.com/pages/உலக-தமிழ்-மக்கள்-இயக்கம்/210804085646629?sk=wall
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடு
கிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

நன்றி -https://www.facebook.com/pages/உலக-தமிழ்-மக்கள்-இயக்கம்/210804085646629?sk=wall

Saturday, September 22, 2012

குழந்தைகளுக்கு அடிக்கடி என்னென்ன நோய் வருன்னு தெரிஞ்சுக்கோங்க...

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!!!

 

வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளியேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

 

காய்ச்சல்: சில குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

 

ஜலதோஷம்: குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால் கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்றுநோய்களால் மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடித்தால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் போது அடிக்கடி மாற்ற வேண்டும்.

 

வயிற்று பிரச்சனை: குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் அதிகமான வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக்கும் கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயிற்று பிரச்சனை இருக்கும் போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

அரிப்புகள்: டயபரை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆகவே எப்போதும் குழந்தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

மேற்கூறிய நோய்கள் எல்லாம் வந்தால், சாதாரணமாக நினைக்க வேண்டாம். மேலும் இத்தகைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

 http://retham.com/morearticaln.php?cat=news&id=15039