Friday, March 5, 2010

எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

lemon.jpgநோயின் ஆரம்பகாலம் எது? சமையல் என்ற ஒன்று என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே நோயும் மனிதனை ஆட்கொள்ளத் தொடங்கியது என்றே கூற வேண்டம். நாவின் சுவைக்கு மனிதன் என்று அடிமையானானோ அன்றே நோயும் நாலும் பத்துமாக நாலாவிதத்திலும், நாலாபக்கங்களிலும் கிளைிவடத் தொடங்கியது. கல்வியோ, ஆய்வுக்கூடமோ தோன்றாத காலத்திலேயே முன் தோன்றிய மூத்த தமிழர் செடி, கொடி, மரங்களின் வேர், தண்டு, இலை, காய், கனி என்பவற்றின் குணக்கூறுகளை அறிந்திருந்தனர். நோய் தணிக்கவும், நீண்ட நாள் வாழவும், நோய் வருமுன் காக்கவும் இயற்கையிலேயே எமக்குக் கிடைக்கும் எளிய பொருட்களை எப்படிப் பயன்படுத்தி பலன்பெறலாம் எனப் பார்ப்போம்.

மருத்துவச் சக்கரவர்த்தி எலுமிச்சை!
ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்தும் பழங்களிலேயே சுவையில், மணத்தில், குணத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது எலுமிச்சையாகும். இதனிடம் காணப்பெறாத நற்பண்புகள் வேறு எந்தப் பழத்திலும் காண முடியாது. அதனால் தான் இப்பழம் மருத்துவச் சக்கரவாத்தி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் மட்டுமின்றி அதி முக்கிய மூலப்பொருள் கூட இதில் அடங்கியிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

உடல் நலம் பேண என்னென்ன பொருட்கள் அவசியமாகத் தேவையோ அவையனைத்தும் இந்த எலுமிச்சம் பழத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது வியப்பூட்டும் செய்தியாயினும் இது விந்தையல்ல முற்றிலும் உண்மையாகும். இரத்தத்தை தூய்மைப்படுத்துவதில் எலுமிச்சம் பழத்தைக் காட்டிலும் சிறந்த மருந்து வேறு ஒன்றும் இல்லை. எலுமிச்சை பழத்தோலிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூட மிகுந்த சக்தி வாய்ந்தது. வாசனை மிகுந்தது. அதனால் அநேக வாசனைத்திரவிய தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலுமிச்சம் பழத்திலுள்ள சித்திரிக்அமிலம் கிருமிகளை எளிதில் கொன்று தொற்றகற்றக் கூடியது.

உடம்பில் கால்சியம் குறைந்தவர்களுக்கு எலுமிச்சம் பழரசத்தை எவ்வகையிலும் தயாரித்துக் கொடுக்கப் பலன் கிடைக்கும். அத்துடன் இதில் விட்டமின் "சி"யும் காணப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து ஊறவிட்டு குளித்துவர சருமப்பிணிகளாகிய நமைச்சல், அரிப்பு, சொறி, சிரங்கு, கரப்பன், படை என்பவற்றிலிருந்து விடுதலை கிடைப்பததுடன் உடல் பளபளப்பும் பெறும். காயம் எற்படும் பட்சத்தில் ஒழுகும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் இப்பழத்திற்கு உண்டு. தவறாது எலுமிச்சம் பழச்சாறு அருந்திவர உடலின் அசதி, அலுப்பு என்பவை நீங்குவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும். இனி வேறு நோய்களுக்கும் இப்பழம் எப்படி நிவாரணம் அளிக்கிறது என்று பார்ப்போம்.

மலேரியா
எலுமிச்சம்பழச்சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து உண்டுவர மறுதலித்து வரும் மலேரியா எளிதில் குணமாகும்.

கல்லீரல் சீர்கேடு
கல்லீரல் சீர்கேட்டால் மூளை, இதயம், சிறுநீரகம், சுவாசப்பை என அனைத்துறுப்புகளும் பாதிப்படையும். இதனால் ஏற்படும் பிணிகளும் அதனால் ஏற்படும் உடலியல் பாதிப்புகளும் இதன் விளைவினால் தோன்றும் உளவியல் தாக்கங்களும் எண்ணிலடங்கா. இதைப் போக்க எலுமிச்சம்பழச் சாற்றடன் தக்காளிச் சாறும் கலந்து காலை, மாலை அருந்திவர மிக விரைவில் நலம் பெறலாம்.

இரத்த அழுத்தம்
நாள்தோறும் மோரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்திவர இரத்த அழுத்தம் குறைவடையும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு
காலையும் மாலையும் எலுமிச்சம் பழச்சாற்றை நீரில் கலந்து தேனும் சேர்த்து அருந்திவர சுகப்பிரசவம் ஆகும். இந்த மருத்துவத்தை கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்திலிருந்தே ஆரம்பித்துவிட வேண்டும். பிறக்கும் குழந்தையும் அழகாயும் ஆரோக்கியமாயும் பிறக்கும்.

முடி உதிர்வதைத் தடுக்க
உள்ளிப்பூண்டை நன்றாக விழுதாக அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தேய்த்து முழுகிவர தலைமுடி உதிர்வது நிற்பதுடன் முடி செழிப்பாயும், கருமையாகவும் பொலிவுற்று வளரும்.

உடல் பருமன் குறைய
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வருவதுடன் வாயைக்கட்டி நொறுக்குத் தீனிகளையும் தவிர்த்துவர பெண்களுக்கு கொடி உடலும் பொய்யோ என இடையும் ஆண்களுக்கு ஆனையுடல் மாறி ஆணழகனாய் மாறும் வாய்ப்பும் ஏற்படுவது திண்ணம்.

காதுவலி
எலுமிச்சம் பழச்சாற்றுட்ன இஞ்சிச் சாற்றையும் கலந்து 2 அல்லது 3 துளிகள் காதில் விடக் குணமாகும்.

வாய்த் துர்நாற்றம் போக்க
எலுமிச்சம்பழரசத்தை நீரில் கலந்து வாய் கொப்பளித்துவர துர்நாற்றம் போவதுடன் வாயில் ஏற்படும் புண், உதடு வறண்டு வெடித்தல் என்பனவும் குணமாகும்.

சறுமம் பொலிவு பெற
எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து அரைத்து பொடி செய்து தனித்தோ அன்றி பாலாடை அல்லது தயிருடன் கலந்து தேய்த்துக் குளித்துவர சருமம் பொலிவு பெறும்.

தொண்டை நோய், இருமல், வாதத்தை நீக்குதல், கபத்தை எடுத்தல் என்பது மட்டுமின்றி மூலத்தைக் கரைக்கவும் விஷத்தை முறிக்கும் தன்மையும் இந்தப் பழத்திற்கு உண்டு.

மலச்சிக்கல் இருந்தால் எலுமிச்சம்பழரசம் பாவிப்பது உகந்தல்ல. அது மலத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால் எலுமிச்சம்பழச்சாற்றை இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குத் தூளுடன் கலந்து அருந்த மலச்சிக்கல் நீங்கும்.

உடலைத் தூய்மைப்படுத்தவும், உடலுறுப்புகள் சீராய் இயக்கவும், தூண்டவும், கூர்மையான மதியை ஏற்படுத்தவும், உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும், சருமப் பொலிவை பெறுவதற்கும் இப்பழம் உகந்தது.

இச்சாற்றுடன் உப்பை கலந்து குடித்தாலும் புத்துணர்ச்சி ஏற்படும். நகச் சுற்று வந்தால் எலுமிச்சம்பழத்தை விரலில் சொருகி வைத்து பலன் பெறுவதை நம் ஊர்களில் பார்த்திருக்கிறோம். தமிழர்கள் வீட்டில் எல்லாம் லெமன் ரைஸ், லெமன் ரசம், லெமன் ஊறுகாய் என்பவை மிகவும் அதிக அளவில் விசேட உணவு ஐயிட்டங்களாக இருப்பது என்பது வழக்கம்தானே.

அதிலும் லெமன் எனும் எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது என்பது நம் வீட்டு தாய்மார்களுக்கு ஒரு கை வந்த சமையற் சுவையாகும். யாரையாவது முதன் முறையாக பார்க்கப் போவதென்றால் கூட ஒரு எலுமிச்சம் பழத்துடன் சென்று, அவரிடம் கொடுக்கும் பழக்கமும், வாகனங்களை வெளிளோட்டம் விட, ஆலயத்திற்குச் சென்று வாகனத்தை நிறத்தி, வழிபட்டு, கற்பூர தீபம் காட்டி, அதன் சக்கரங்கள் அடியில் லெமனை வைத்து நசுக்கிவிடும் தன்மையில் வாகனத்தை ஓட்ட முற்படுவதும் நமது பாரம்பரியமல்லவா. இவ்வாறாக எலுமிச்சம் பழம், சாறு அதன் தோல், விதை, இலை அனைத்துமே அற்புத மருத்துவத் தன்மையுடன் நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாவலராக துணை புரிவதால், நீங்கள் அனைவரும் இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து.




--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/

No comments:

Post a Comment