Saturday, December 29, 2012

Home Remedies: Acidity, Cholesterol, Blood Pressure, Diabetes..


CURE FOR ACIDITY :

Description: cid:1.3203174981@web112902.mail.gq1.yahoo.com


Acidity, it is said, is worse than Cancer. It is one of the most common problems people encounter in their daily life. The home remedy for Acidity is Raw Grains of Rice. 


The Process: 

1. Take 8 - 10 grains of raw uncooked rice 

2. Swallow it with water before having your breakfast or eating anything in the morning 

3. Do this for 21 days to see effective results and continuously for 3 months to eliminate acidity from the body 

The Cure: 

Reduces acid levels in the body and makes you feel better by the day.

 

CURE FOR CHOLESTEROL: 

Description: cid:2.3203174982@web112902.mail.gq1.yahoo.com


Cholesterol problem accompanies with Hypertension and Heart Problems. This is also one of the common problems in people who have High Blood Pressure and Diabetes. The home remedy for Cholesterol problem is RAW SUPARI or

Betel Nuts.



The Process: 

1. Take Raw Supari (Betel Nut that is not flavoured) and slice them or make pieces of the same 

2. Chew it for about 20 - 40 minutes after every meal 

3. Spit it out 

The Cure: 

When you chew the supari, the saliva takes in the juice that is generated and this acts like a Blood Thinner. Once your blood becomes free flowing, it brings down the pressure in the blood flow, thereby reducing Blood Pressure too.

 

CURE FOR BLOOD PRESSURE:

Description: cid:3.3203174982@web112902.mail.gq1.yahoo.com


One of the simple home remedy cure for Blood Pressure is Methi Seeds or Fenugreek Seeds. 

The Process: 

1. Take a pinch of Raw Fenugreek Seeds, about 8 - 10 seeds 

2. Swallow it with water before taking your breakfast, every morning 

The Cure: 

The seeds of Fenugreek are considered good to reduce the blood pressure.

CURE FOR DIABETES: 

There are 2 home remedies for Diabetes. One is Black Tea

and the other is Lady Fingers or Okra.


BLACK TEA: 
Due to high medication, the organ that is worst affected is the Kidney. It has been observed that Black Tea (tea without milk, sugar or lemon) is good for the Kidney. Hence, a cup of black tea every morning is highly advisable.

Description: cid:4.3203174982@web112902.mail.gq1.yahoo.com


The Process: 

1. Boil water along with the tea leaves (any tea leaves will do). 

2. Drink the concoction without adding milk, sugar or lemon. 

The Cure: 

Black Tea will help in enhancing the function of the kidney, thereby not affecting it more.

 

LADY FINGER or OKRA: 

Lady Finger/Okra is considered to be a good home medicine for diabetes.

Description: cid:5.3203174982@web112902.mail.gq1.yahoo.com


The Process: 

1. Slit the ladies finger into 2 halves vertically and soak it in water overnight. 

2. The next morning, remove the ladies fingers and drink the water, before eating your breakfast. 

The Cure: 

After the ladies fingers are soaked overnight in the water, you can observe that the water becomes sticky in the morning. This sticky water is considered to be good for people who suffer from Diabetes.
Source http://groups.yahoo.com/group/dilsedesigroup/message/348231

Monday, December 17, 2012

குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி :
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.பிறந்த குழந்தையானது...

முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்
2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்
3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். 'மா', 'பா' போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
8-வது மாதத்தில் : தவழும்.
9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் 'மாமா', 'பாபா' போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் 'டாட்டா' சொல்லும்.
10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.
36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.
  • கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் 'சி' மற்றும் 'டி' அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றைபாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
  • பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
  • ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.

பிறந்த குழந்தைக்கான உணவு


  • பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிரசவித்தவுடன் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்புடன் இருக்கும். இதைச் சீம்பால் என்பார்கள். இதில் பல ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் இருப்பதால் இதைத் தவறாமல் குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
  • பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.
  • குழந்தை பிறந்ததும், சர்க்கரை, தேன் ஆகியவை கலந்த நீர், வெண்ணெய் போன்றஎதுவும் வேண்டாம். வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைசுமார் 15 மி.லி கொடுக்கலாம். வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மருந்துகளை, தேவைப்பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனையுடன் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் பசும்பாலில் இரண்டு பங்கும் தண்ணீரில் ஒரு பங்கும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு சிறிதளவு சர்க்கரையை சுவைக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.
பாலுடன் சேர்ந்த பிறஉணவுகள் :


தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.
  • ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
  • ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேகவைத்த முட்டையின் மஞ்சள்கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
  • பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்ûயும் ஊட்டலாம்.
  • பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம்.
  • பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
  • அரிசி, கோதுமை, கேழ்வரகு, பொட்டுக் கடலை போன்ற உணவுகளை சர்க்கரையைக் கலந்து கொதிக்க வைத்துக் கஞ்சியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
  • புதுவகை உணவைக் கொடுக்கும் போது பழக்கமான உணவைக் கொடுப்பது போல ஒட்டு மொத்தமாக அதிகம் கொடுக்கக் கூடாது. எந்தப் புதுவகை உணவையும் தினமும் ஒருமுறைசிறிதளவு கொடுத்துப் பழக்கிய பிறகே, அந்த உணவின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.


  • குழந்தையும் கை மருத்துவமும் :

  • பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
  • பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடைய கல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது "மஞ்சள் காமாலை" நோயாக இருக்கலாம்.
  • பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
  • சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
  • குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
  • கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லி ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
  • இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான் என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
  • பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான சுகாதாரம் :


  • கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
  • புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
  • குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
  • குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
  • குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
  • குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
  • குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.


குழந்தை பராமரிப்பு

எனது கனவை  உனது விழியில்  எடுத்து வந்தாயே! தூக்கத்தில் எப்போதாவது தென்படும் அனிச்ச மலர் புன்னகை... தொட்டாற்சிணுங்கியைப் போன்ற அழுகை... உயிர் வரை பாய்ந்து சென்று திரும்பி வரும் குட்டி மீன்களாக அசையும் கண்கள்... மார்பின் கதகதப்பில் நீந்தி மகிழும் பூ உதடுகள்... இப்படி மொட்டு மலர்வதைப் போல ஸ்பரிசத்தால், அழுகையால், மெல்லிய அசைவுகளால் ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது செல்லக்குட்டி. தாய்ப்பால் குடிக்க ஆரம்பித்து ஒரு மாதத்தில் அதன் முகத்தில் அத்தனை பட்டு ரோஜாக்கள்! மூடிய இமைகளின் மீது மெல்ல மெல்ல ஒரு பட்டுப்பூச்சியாக மாறி, அதன் மீது அமர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் கனவை நாமும் உணர முடிந்தால் எவ்வளவு அழகு! பாட்டியை, அப்பாவை, கணவனை, கணவனின் தங்கையை என அனைத்துத் தலைமுறையின் குட்டிக் குட்டிச் சாயல்களையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து வெளிப்படுத்தும் அற்புதம் இதழ் விரிய விரிய வளர்வதைப் பார்ப்பதே பெரும் சுகம்!

பிறந்து ஒரு மாதம் வரை குழந்தை பராமரிப்பு குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் அபாய அறிகுறிகள் குறித்தும் விளக்குகிறார் கோவை குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி குமரன்.  ''ஒரு தாய் அணு அணுவாக ரசித்து, விரும்பிப் பெற்றுக்கொள்வதாக குழந்தை இருக்க வேண்டும். அப்போதுதான் கருவின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். ரத்த விருத்தி, கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால், பிரசவத்துக்குப் பின் தாய்க்கும் குழந்தைக்கும் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் இது அவசியம்.  நார்மல் டெலிவரி முடிந்து, ஒரு மாதம் ஆன பிறகு வயிற்றுப்பகுதி பெருத்து விடுவதைக் குறைக்கவும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தாய்மைக் காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். காம்பில் அடைப்பு இருக்கிறதா எனப் பார்த்து நிப்பிள் பயிற்சி செய்வது அவசியம். பால் கொடுக்கும் முறையை 'லேட்சிங் ஆன்' என்கிறோம். மார்பை எடுத்து குழந்தையின் வாயில் கொடுக்க வேண்டும். கீழ் உதட்டில் படும்படி காம்பு இருக்க வேண்டும். காம்பைச் சுற்றி இருக்கும் கருவளையம் 'ஏரியோலா' எனப்படுகிறது.

காம்புடன் ஏரியோலாவையும் குழந்தையின் உதடுகள் தொட்டுப் பிடித்துச் சப்ப வேண்டும். காம்பை மட்டும் சப்பினால் பால் சுரப்பு அதிகரிக்காது. பாலோடு குழந்தை சிறிது காற்றையும் உள் இழுக்கிறது. பால் குடித்து முடித்த பின், தோளில் போட்டு முதுகுப் பக்கத்தை நீவிக் கொடுத்தால் ஏப்பம் விடும்... அந்தக் காற்று ரிலீஸ் ஆகும். ஒரு மாதத்துக்கு தாய்ப்பால் தவிர தண்ணீர்கூட குழந்தைக்குத் தேவையில்லை. புட்டியில் எளிதாக சப்பினாலே பால் கிடைத்து விடும். தாய்ப்பாலுக்கு குழந்தை நிறைய உழைக்க வேண்டும். இதனால் குழந்தை புட்டிப்பாலுக்குப் பழகி விடும். பால் சுரப்பும் குறைந்து விடும். 6 மாதத்துக்குப் பின் மற்ற பால் சேர்த்தாலும், கப், ஸ்பூனிலேயே கொடுக்க வேண்டும்.  ஒன்றரை வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் ஆரோக்கியமானதே. அதிக மாதங்கள் தாய்ப்பால் குடிக்கும்போது தாய்க்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு அதிகமாக இருக்கும்.
 குழந்தை பனிக்குடத்தில் இருந்த போது 'வர்னிக்கல் காசியோசா' என்ற மாவு போன்ற படலம் ஒட்டியிருக்கும்.

அது தோலுக்குப் பாதுகாப்பு அளிப்பதால் முதலில் 'ஸ்பாஞ்ச் பாத்' செய்யப்படுகிறது. குழந்தையின் தொப்புள்கொடி விழும் வரை 'டவல் பாத்' எடுக்க வேண்டும். பின்னர் டப்பில் குழந்தையை வைத்து தாயே குளிப்பாட்டலாம். குளித்த பின் உடலில் உள்ள ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். பவுடர் தேவையில்லை. சாம்பிராணி, தூபம் ஆகியவையும் தேவையில்லை. துவளைப்பொடி, பயத்தமாவு ஆகியவையும் கூடாது. குழந்தைகளுக்கான மென் சருமத்தை பாதிக்காத வகையில் குளியல் இருக்க வேண்டும்.  தொப்புள்கொடி 5 - 10 நாட்களில் விழுந்து விடும். அது வரை, டவல் பாத்துக்கு பிறகு, தொப்புள் பகுதியில் காட்டனில் ஸ்பிரிட் மட்டும் தொட்டு துடைக்க வேண்டும். ஆயின்மென்ட் தேவையில்லை.  குழந்தை பிறந்து 24 முதல் 48 மணி நேரத்துக்குள் சிறுநீர் கழிக்க வேண்டும். ஃப்ளோ நன்றாக இருக்க வேண்டும். விட்டு விட்டுப் போதல், சொட்டு சொட்டாகப் போதல், யூரின் போகும் போது அழுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் மூத்திரப்பையில் யூரின் சேரும் போது குழந்தைகள் அழலாம்.

யூரின் போன பின்னர் ஈரம் ஆனதற்காக அழலாம். இது சாதாரணம். முக்கியபடியே அழுதால் மருத்துவரிடம் கொண்டு வரவேண்டும்.
 ஒரு வாரத்தில் குழந்தையின் மலம் மெல்ல நிறம் மாறி முட்டையின் மஞ்சள்கரு போன்ற பொன் மஞ்சளுக்கு மாறும். சந்தனம் போல மாறிவிட்டால் பயப்படத் தேவையில்லை. வெளிறிய நிறத்தில் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இது வயிற்றுப்போக்கு கிடையாது. ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறையும் கழிக்க வாய்ப்புள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படாத வரை எந்தப் பிரச்னையும் இல்லை.  60 சதவிகிதம் பச்சிளம் குழந்தைகளுக்கு காமாலை வருகிறது. இது அடுத்த சில நாட்களில் சரியாகி விடும். ஆனால், கை, கால், பாதம், கண்கள், உடல் அதிக மஞ்சளாகத் தென்பட்டாலும் பல நாட்களுக்கு காமாலை தொடர்ந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

ஒரு மாத குழந்தைகளுக்கு சளித்தொல்லை இல்லாமல் மூக்கடைப்பு ஏற்படலாம். மூக்கொழுகல் இன்றி ஏற்படும் மூக்கடைப்புக்கு நார்மல் சலைன் இரண்டு சொட்டு விட்டால் போதும். சரியாகி விடும். மூக்கடைத்துக் கொண்டால் வாயில் மூச்சு விடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்காது. பால் குடிக்கும் போதும் மூச்சுவிட சிரமப்படும். மூக்கடைப்பு இருந்தால் பால் கொடுப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மூக்கில் சொட்டு மருந்து விட வேண்டும்.   சில அபாய அறிகுறிகளும் உள்ளன. 24 மணி நேரத்துக்கு மேல் மலம் வராமல் இருத்தல், 48 மணி நேரத்துக்கு மேல் சிறுநீர் போகாமல் இருத்தல், ஒரு வாரத்துக்கு மேல் தொடரும் காமாலை, நன்றாகப் பால் குடித்து தூங்கும் குழந்தையிடம் காணப்படும் பழக்க மாற்றம், தூங்க சிரமப்
படுதல், 2 - 3 மணி நேரத்துக்கு மேல் தூங்குதல், பால் குடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சமாதானப்படுத்த முடியாத அழுகை, மூச்சு விட சிரமப்படுதல், சிறுநீர், மலம் கழிக்கும் போது சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.

 குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்த பின், முதல் 15 நாட்களில் அதன் ஆரோக்கியம் குறித்து டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். பிறந்தவுடன் முதல் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைட்டிஸ் 'பி' முதல் டோஸ், பிசிஜி காசநோய் தடுப்பு மருந்து ஆகியவை போடப்பட வேண்டும்.
பிறந்து ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்தான் அதன் மொழி. பார்க்கவும் பேசவும் தெரியாத அந்தப் பிஞ்சை கண்ணும் கருத்துமாக கவனிப்பதன் மூலம் மட்டுமே அதன் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்கிறார் டாக்டர் நந்தினி குமரன்.
ஆசை ஆசையாய் பால் குடித்துவிட்டு அயர்ந்து உறங்கும் அந்த விழிகள் ஒவ்வொரு முறை விழிக்கும் போதும் புதிதாக மலர்கிறது. தூங்கும்போது அந்த இரண்டு விழி மொட்டுகளுக்குள் கனவின் விசும்பல் மெல்ல நிகழ்கிறது!

Source http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1520&cat=500

Friday, December 7, 2012

குழந்தை வளர்ப்பு

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை
குழந்தை பிறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். இந்த சீம்பால் எவ்வளவு முக்கியமேன்றரிய நாம் நம் கிராமத்துப்பக்கம் சென்றால் அறியலாம். இன்றும் நம் கிராமத்துப்பக்கம் பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் சீம்பால் சாது நிறைந்தது என்று பலரும் தேடிச்சென்று வாங்கிச் செல்வதைக் காணலாம். பசுவின் சீம்பால் அதன் கன்றுக்காக கடவுள் அளிப்பது. அது சத்து நிறைந்தது எனின் கடவுள் நம் குழந்தைக்காக நமக்களிக்கும் சீம்பாலும் சத்து நிறைந்ததே. ஆகவே சத்து நிறைந்த நம் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பாலை நாம் கண்டிப்பாக நம் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து வரும் 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப் பால் போதவில்லை என்று கருதும் சமயத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கேரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நன்கு வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி காலை 11 மணியளவில் கொடுக்கலாம். கண்டிப்பாக மாலையில் தர வேண்டாம்.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

முதல் முறை:- உடைத்த கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெள்ளம் கலந்து கொடுக்கலாம்.

2வது முறை:- கோதுமை, ராகி, மக்காச்சோளம், உடைத்தகடலை,முந்திரி, கேழ்வரகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றில் உடைதக்கடலை தவிர்த்து மீதியை வறுத்து எல்லாவற்றையும் அரைத்து மாவு தயாரித்து அதில் நீர் கலந்து கொதிக்க வைத்து கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாம். இதிலும் மேற்சொன்னவாரே குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

மேற்ச சொன்ன இரண்டு முறைகளிலும் பால் கலந்தும் கொடுக்கலாம்.

* குறிப்பு:- கஞ்சியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது வெயில் காலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கஞ்சி குளிர்ச்சியைத் தரும். இதனால் குளிர்காலத்தில் அறிமுகப்படுத்தும்போது சளி பிடிக்கலாம்.

12வது மாதம் முதல் எல்லாவித உணவையும், காய்கறிகளையும் கொஞ்சம் நன்கு வேகவைத்து அறிமுகப்படுத்தவும்.

குழந்தைக்கு உணவளிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

புதிதாக அறிமுகப்படுத்தும்போது ஒன்றுக்கும் மட்ரொன்றிர்க்கும் இடைவெளி தேவை. அப்போது தான் எந்த உணவு குழந்தைக்கு ஒத்துகொள்ளவில்லை என்று நாம் அறிய முடியும். அந்த உணவை தவிர்த்து மட்ட்ரவற்றை கொடுக்க இயலும்.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலோ நாம் அறிமுகப்படுத்திய புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என அறியலாம். மேலும் தரையில் இருந்து ஏதாவது பொருளை வாய்க்குள் போட்டுக்கொண்டாலும் வயிறு உபாதை ஏற்படலாம்.

குழந்தை குறைந்தது 5 முதல் 7 தடவைகள் மலம் கழிக்கணுலாம். அதற்க்கு மேல் மலம் கழித்தால் அருகில் உள்ள மருத்துவரை அகவும்.

மேலும் உடனே நாம் தினமும் அளித்துவரும் உணவை நிறுத்திவிட்டு பார்லி கஞ்சி (அ) நொய் கஞ்சி கொடுக்கவும்.

நொய் கஞ்சி:- சிறிது பச்சரிசி நொய்யை ஒரு அகலப் பாத்திரத்தில் அதிக தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இந்த அதிகத் தண்ணீரை தண்ணீருக்கு பதில் குழந்தைக்கு கொடுத்து வரவும. கஞ்சியை உணவுக்கு பதில் கொடுக்கவும். வயிட்ட்ருபோக்கு ஓரிரு நாட்களில் உடனே சரியாகி விடும்.

இதுவரை நாம் கூறி வந்தவை குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

இனி மன ஆரோக்கியம் (குழந்தையின், அறிவுத்திறன் வளர பெற்றோர் செய்யவேண்டியவைகளைப் பார்ப்போம்.

முக்கியமானதும் நம்மில் பலர் செய்ய தயங்குகிற விஷயம் குழந்தையுடன் உரையாடுவது. நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை பொம்மை அல்ல. அதற்கும் எல்லாம் தெரியும். நாம் பேசும் அனைத்து விஷயங்களையும் குழந்தை கிரகித்துக் கொள்கிறது. ஆகவே குழந்தை பிறந்தது முதல் பெரியவரிடம் உரையாடுவது போல் உரையாடுங்கள்.

எடுத்துக்காட்டாக குழந்தை பால் குடிக்கும் முன் என்னடா செல்லம் பசிக்கிறதா? பால் குடிப்போமா? இப்ப அம்மா பால் தருவேனாம். சமத்தா பால் குடிச்சிட்டு விளையாடுவீங்கலாம். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்திருகிறார்கள். எல்லோரையும் பார்த்து சிரிப்பீர்கலாம். நீங்க சிரிச்சா எல்லோருக்கும் சந்தோஷமாம். என்னடா செல்லம் எல்லாரையும் சந்தொஷப்படுதுவீர்களா? சரி இப்ப பால் குடிப்போமா என்று குழந்தையிடம் உரையாடிக்கொண்டே பால் கொடுக்கலாம்.

இது போல் எபோழுதும் எது செய்தாலும் குழந்தையிடம் நாம் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறம் அதிகரிப்பதோடு குழந்தைக்கு பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டி குழந்தை சீக்கிரம்பேச ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு பேசிகொண்டே இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே ஒரு அன்யோன்யம் பிறக்கும். இதனால் எதிர்காலத்திலும் எல்லாவற்றையும் உங்களிடம் உங்கள் குழந்தை பகிர்ந்து கொள்ளும். இது போதுமே உங்கள் குழந்தையை உங்கள் விருப்பம் போல் நல்லவர்களாக வளர்க்க.

6 மதங்கல்லுக்குப் பிறகு நீங்கள் பேசுவதோடு உலக அறிவையும் புகட்டுங்கள். இவை எவ்வாறு என்று ஒரு சின்ன எடுத்துக்காட்டின் மூலம் கீழே கூறியுள்ளேன். இவை குழந்தையின் ஆர்வத்தை தூண்டி நுட்ப்ப அறிவை -ஐ அதிகரித்து சீக்கிரம் பேச உதவுவதுடன், குழந்தை நல்ல அறிவாளியாக, கூர்மையான புத்திசாலியாக, ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக மாறுவதை நீங்கள் கண் கூடாக காணலாம்.

குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை

குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.

பிறப்பு முதல் ஒரு வயது வரை:

பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.

குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்' பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்' மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் `பேசினில்' கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான) நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும். முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்' தேய்த்து கழுவவேண் டும். அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.

குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.

சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில் இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில் ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.

பால் குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந் தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.

ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்' கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.

2 முதல் 3 வயது வரை:

இரண்டு வயதான பிறகும் குழந்தை ஒரு சில வார்த்தைகள்தானே பேசுகிறது -என்று 75 சதவீத பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் பேச்சுத்திறன் அதிகரிக்கவே செய்யும். அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்'டிடம் ஆலோசனை பெறவேண்டும்.

குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.

இரண்டு வயது குழந்தைகள் 9-10 மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.

குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் போதிய இடைவெளியில் அமர்ந்து பார்க்கா விட்டால், கண்களைப் பாதிக்கும். குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது மிக அவசியம். அந்த ஆர்வத்தைக் கெடுத்து டி.வி. முன்னாலே உட்கார வைத்து விடுவது சரியல்ல.

இந்த பருவத்து குழந்தைகள் சிலவற்றி டம் மண் தின்னும் பழக்கம் ஏற்பட்டு விடும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மண்ணைத் தின்னும். அந்த சத்தை ஈடுசெய்ய வேண்டும். டாக்டரிட மும் காட்டி ஆலோசனை பெறலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். வற்புறுத்தி திணிப்பது சரியல்ல.

குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது அவை பளபளப்பாகவும், விலை உயர்ந்த தாகவும் இருந்து எந்த பலனும் இல்லை. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும். சப்பாத்தி மாவை சிறிதளவு பிசைந்து கொடுத்து பலவிதமான உருவங்கள் செய் யச் சொல்லலாம். பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.

4 முதல் 10 வயது வரை:

இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ, அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.

இப்போது 5, 6 வயது சிறுவர் -சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.

பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.

இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.

சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்' என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

http://books.google.co.in/books?id=DPOC1D0ImZsC&lpg=PT51&pg=PT51#v=onepage&q&f=false