Saturday, January 7, 2012

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை:

இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சோகம் வாழ்க்கையில் இருக்கலாம் தான். ஆனால், அப்படிப் பட்ட சோகத்தை , நிரந்தரமாக வைத்து விடுவது புத்திர சோகம். இதனுடைய வலி, வீர்யம் -அதை அனுபவிப்பவர்களை தவிர மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம்.

இன்றைக்கு மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி விட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு, இந்த கட்டுரை உதவியாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

மருந்து கால் - நம்பிக்கை முக்கால் என்பார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றினால் , அவர்களுக்கு நிச்சயம் வாரிசு பாக்கியம் உண்டாகும்.

நமது சமீப காலத்து சித்தர் பெருமான் தவத்திரு . பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும
படத்தை க்ளிக் செய்தால் பெரியதாக காட்டும்.


ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை

தங்க ஆனந்தக் களிப்பை உள்ளன்போடு பாராயணம் செய்வோர் இல்லத்தில் பொன் வரவு அதிகமாகுதல், செல்வ யோகங்கள் பெருகுதல் பலிதமாகின்றன.


வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும், குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும்.


உங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள். மகாலிங்கத்தின் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்க ஆசிகள் !


Regards,
Sumathi Srini

http://www.penmai.com/forums/infertility-treatments/6685-a.html

No comments:

Post a Comment