Thursday, June 28, 2012

மிளகின் பயன்கள்


*தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.   
 
* மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.  
 
* சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.
http://www.maalaimalar.com/2011/02/19090040/medical-value-in-black-Pepper.html

பூண்டின் மருத்துவ குணங்கள்


உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு.
 
*இதய அடைப்பை நீக்கும் தன்மை கொண்டது.
 
*இது இரத்த அழுத்தம் வராமல் காக்கும். மேலும் இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் இந்த பூண்டு விளங்குகிறது.
 
*நாள்பட்ட சளித் தொல்லையை நீக்கும்.
 
*தொண்டை சதையை நீக்கும்.
 
*இது மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
 
*தாய்ப்பால் அதிகம் சுரக்க இந்த பூண்டு உதவுகிறது.
 
*மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.  
Source : http://www.maalaimalar.com/2009/05/28111401/medical.html

நலம் தரும் பழங்கள்

பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
 
2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
 
3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.
 
4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.
 
5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
 
6. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.
Source : http://www.maalaimalar.com/2009/05/28111401/medical.html

Sunday, June 17, 2012

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.

அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Source http://www.maalaimalar.com/2012/05/13133856/body-cold-fenugreek.html